தமிழ்நாடு

tamil nadu

விவேக் குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் தெரிவித்த விஜய்

By

Published : Apr 26, 2021, 12:15 PM IST

சென்னை: நடிகர் விஜய் மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கின் வீட்டிற்குச் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

vijay
vijay

நகைச்சுவை நடிகர் விவேக் ஏப்ரல் 17ஆம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவுக்கு திரைப் பிரபலங்களும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.

விவேக் மரணமடைந்தபோது நடிகர் விஜய் 'தளபதி 65' படப்பிடிப்பிற்காக ஜார்ஜியாவில் இருந்தார். அதனால் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியவில்லை.

இந்நிலையில், ஜார்ஜியாவிலிருந்து விஜய் நேற்று (ஏப்ரல் 25) சென்னை திரும்பினார். இதனையடுத்து இன்று (ஏப்ரல் 26) விவேக்கின் வீட்டிற்குச் சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்த விஜய் அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

விவேக் - விஜய் இணைந்து 'யூத்', 'பத்ரி', 'திருமலை', 'குஷி', 'பிரியமானவளே', 'குருவி', 'பிகில்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details