அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், கதிர் உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்த திரைப்படம் 'பிகில்'.
அட்லியுடன் மூன்றாவது முறையாக விஜய் இணைந்திருந்ததால் இத்திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏகபோகமாக இருந்தது. ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்திருந்த இந்தத் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி வெளியானது. திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனம் எழுந்தது. இருப்பினும் திரைப்படம் 300 கோடி ரூபாய் வசூல் செய்து ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது.