'மாநகரம்', 'கைதி' ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் விஜய்யை வைத்து இயக்கும் பெயரிடப்படாத படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் சேதுபதி, மாளவிகா மோகன், ஆண்டனி வர்கீஸ், சாந்தனு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு வடசென்னையில் நடந்துவருகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் என்பதால் ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது.