சமீபத்தில் வெளியான விஜய்யின் ’பிகில்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, பெயர் சூட்டப்படாத தனது 64ஆவது படத்தில் ('தளபதி 64') விஜய் நடித்துவருகிறார். அதில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார்.
இரண்டாம் இன்னிங்ஸுக்கு தயாரான 'தளபதி 64'! - தளபதி 64 இரண்டாம் கட்ட படபிடிப்பு
'தளபதி 64' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது.
விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க, சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ் உள்ளிட்டவர்களும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. அதில் விஜய் கலந்துகொண்டார், ரசிகர்கள் விஜய்யை கண்ட மகிழ்ச்சியில் ஆரவாரமிட்டனர். இதைத்தொடர்ந்து, நடிகர் விஜய்யும் தனது வழக்கமான பாணியில் ரசிகர்களுக்கு வணக்கம் தெரிவித்து கையசைத்தார். அந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலானது.
இதனையடுத்து இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நாளை டெல்லியில் தொடங்கவுள்ளது. இதில் படத்தின் சில முக்கியமானசண்டைக் காட்சிகள் படமாக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்தை அடுத்தாண்டு கோடையில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. ஏப்ரல் 9ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாகலாம் என தகவல்கள் கிடைத்துள்ளன.