அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து தீபாவளி அன்று திரைக்கு வரவுள்ள படம் 'பிகில்'. இதன் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானதையடுத்து ரசிகர்கள் மத்தியில் படம் குறித்தான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இதையடுத்து படத்தின் முக்கிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
தளபதி 64 படத்தின் புது அப்டேட்! - விஜய்
விஜய்யின் 64ஆவது திரைப்படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள நிலையில், அதுகுறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
thalapathy 64
இந்நிலையில், விஜய்யின் 64ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இப்படத்தில் ராஷி கண்ணா, ராஷ்மிகா மந்தானா நடிப்பதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து முக்கிய அறிவிப்பு வெகு விரைவில் வெளியாகும் என்று கோடம்பாக்கம் வட்டாரம் கிசுகிசுக்கிறது.