தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

’தளபதி 64’ அப்டேட்: மாளவிகாவின் ஒரே போட்டோ... குஷியில் தளபதி ரசிகர்கள்! - தளபதி 64 இல் மாளவிகா மோகன்

நடிகை மாளவிகா மோகனன் ’தளபதி 64’ படப்பிடிப்பின்போது, எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தை கலக்கிவருகிறது.

malavika mohanan

By

Published : Nov 11, 2019, 9:43 PM IST

நடிகர் விஜய் பிகில் படத்தைத் தொடர்ந்து 'கைதி' பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். இன்னும் பெயர் சூட்டப்படாத இப்படத்திற்கு தற்காலிகமாக 'தளபதி 64' என்று பெயர் வைத்துள்ளனர்.

சென்னையில் நடைபெற்ற 'தளபதி 64' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் விஜய் கலந்துகொண்டார். இதனையடுத்து இரண்டாம்கட்ட படப்பிடிப்பு டெல்லியில் சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதிலும் விஜய் கலந்துகொண்டு நடித்து வருகிறார். இதனையடுத்து இந்தப் படப்பிடிப்பில் மாளவிகா மோகனனும் கலந்துகொண்டுள்ளார்.

மாளவிகா மோகனன் அப்டேட்

இதனை அறிவிக்கும் விதமாக மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டாகிராமில், ’தளபதி 64’ படப்பிடிப்புக்குச் செல்லும் முன் ’தளபதி 64 டெல்லி . நாள் 6’ என்று பதிவிட்டுள்ளார். இவரின் இந்த அப்டேட்டை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details