தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'தளபதி 64' ஃபர்ஸ்ட்லுக் அப்டேட்! - தளபதி 64 அப்டேட்

'தளபதி 64' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

thalapathy

By

Published : Oct 29, 2019, 5:20 PM IST

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான படம் 'பிகில்'. விஜய் தந்தை-மகனாக இரட்டை வேடங்களில் நடித்த இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது.

இதைத் தொடர்ந்து விஜய் 'கைதி' இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 3ஆம் தேதி தொடங்கியுள்ளது. அதில் விஜய்யுடன் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ், நடிகர் சாந்தனு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இப்படத்தை அடுத்தாண்டு கோடைகாலத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகும் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2020ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்படவுள்ளது. மேலும் இதுவரை பார்த்திராத விஜய்யை இப்படத்தில் ரசிகர்கள் பார்க்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details