தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

‘தளபதி’ நாயகியின் ரீ-என்ட்ரி - ரஜினிகாந்த்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘தளபதி’ படத்தின் நாயகி ஷோபனா திரையுலகுக்கு ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.

Shobana in thalapathi

By

Published : Oct 8, 2019, 7:14 PM IST

தமிழ், மலையாளம், கன்னடம் என பல்வேறு இந்திய மொழிகளில் 200க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்தவர் ஷோபனா. ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் என தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் பலருடன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவர் ரஜினியுடன் நடித்த ‘தளபதி’ படம் மூலம் மிகவும் பிரபலம், சிறந்த நடிகைக்காக இரண்டு முறை தேசிய விருது பெற்றுள்ளார். இவர் கடைசியாக 2013ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான ‘போடா போடி’ , மலையாளத்தில் ‘திற’ ஆகிய படங்களில் நடித்திருந்தார். இந்நிலையில், ஆறு வருடங்களுக்கு பிறகு ஷோபனா ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார்.

Shobana in thalapathi

அறிமுக இயக்குநர் அனூப் சத்யன் இயக்கத்தில் சுரேஷ் கோபியின் ஜோடியாக ஷோபனா ஒரு மலையாள படத்தில் கமிட்டாகி இருக்கிறார். இந்த ஜோடி 14 வருடங்களுக்குப் பிறகு இணைந்து பணியாற்றும் திரைப்படம் இது, கடைசியாக 2005ஆம் ஆண்டு வெளியான ‘மக்கள்கு’ படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.

சுரேஷ் - ஷோபனா ஜோடியுடன் கல்யாணி பிரியதர்ஷன் முக்கிய வேடத்தில் நடிக்கும் இத்திரைப்படத்தை துல்கர் சல்மான் தயாரிக்கிறார்.

இதையும் வாசிங்க: கைதி படத்தில் நான் சின்ன பகுதிதான்' - நடிகர் கார்த்தி பேச்சு!

ABOUT THE AUTHOR

...view details