தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

எம்ஜிஆர் பிறந்த நாளில் வெளியான 'தலைவி' அரவிந்த் சுவாமி லுக் - அரவிந்த் சுவாமி புகைப்படங்கள்

எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு 'தலைவி' திரைப்படத்தில் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடிக்கும் அரவிந்த் சுவாமியின் புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

Aravindsamy MGR LOOK
Aravindsamy MGR LOOK

By

Published : Jan 17, 2020, 10:10 AM IST

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ஏ.எல். விஜய் தலைவி படத்தை இயக்கி வருகிறார்.

ஏ.எல். விஜய் இயக்கி வரும் 'தலைவி' படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் ஜெயலலிதா கதாபாத்திரத்திலும், நடிகர் அரவிந்த் சுவாமி எம்ஜிஆர் கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்.

இந்தப் படத்தை ஷைலேஷ்.ஆர். சிங் மற்றும் விஷ்ணுவர்தன் இந்தூரி ஆகியோர் தயாரிக்கின்றனர். தமிழில் 'தலைவி' என்ற பெயரிலும், இந்தியில் ஜெயா என்ற பெயரிலும் இப்படம் உருவாகி வருகிறது.

'தலைவி' படத்திற்காக கங்கனா மற்றும் அரவிந்த் சுவாமி ஆகியோர் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு நடித்து வருகின்றனர். வரும் ஜுன் மாதம் 26ஆம் தேதி இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ள நிலையில், இன்று (ஜனவரி 17) எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு அரவிந்த் சுவாமியின் புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

எம்ஜிஆர் போன்ற தோற்றத்தில் அரவிந்த் சுவாமியின் இளமையான புகைப்படங்கள் தற்போது வெளியாகி, எம்ஜிஆர் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

இதையும் படிங்க...

'இவரா இப்படி செஞ்சது' - ராஷ்மிகா வீட்டில் வருமான வரிச்சோதனை

ABOUT THE AUTHOR

...view details