தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'தலைவி' கதையால் எழுந்த பிரச்னை - இயக்குநர் விஜய் மீது எழுத்தாளர் புகார்

'தலைவி' படத்தில் தனக்கு முறையான அங்கீகாரம் அளிக்கவில்லை என இயக்குநர் விஜய் மீது புகார் தெரிவித்துள்ள எழுத்தாளர் அஜயன் பாலா, நட்புக்காககூட சினிமாவில் முறையான ஒப்பந்தமில்லாமல் யாரும் பணி புரியவேண்டாம் என்று சக எழுத்தாளர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

Thalaivi movie story issue
Actress Kangana Ranaut in Thalaivi movie

By

Published : Feb 25, 2020, 12:50 PM IST

சென்னை: 'தலைவி' பட கதையில் சில பிரச்னை எழுந்த நிலையில், அந்தப் படத்தின் இயக்குநர் தனது முதுகில் குத்தியதாக பிரபல எழுத்தாளர் அஜயன் பாலா புகார் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தலைவி என்ற பெயரில் இயக்குநர் விஜய் படமாக்கி வருகிறார். இந்தப் படத்துக்கான கதை, எழுத்தாளர், இயக்குநர் அஜயன் பாலா எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வருகிறது.

இதையடுத்து படத்தில் தனது பெயர் இடம் பெறவில்லை என்று இயக்குநர் அஜயன் பாலா தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “சினிமாவில் நம்பிக்கைத் துரோகத்தை பலமுறை சந்திந்திருந்தாலும், தலைவி படம் மூலமாக எனக்கு நேர்ந்திருக்கும் அவமானத்தை ஏற்கவே முடியவில்லை. இத்தனைக்கும் நான் ஆறு மாத காலம் ஆய்வு செய்து எழுதிக்கொடுத்த நாவலை அடிப்படையாக வைத்து நீதிமன்ற வழக்குகளிலும் ஆதராமாக பயன்படுத்திக்கொண்டு, வழக்கில் வெற்றி பெற்ற பின் என் பெயரை சுத்தமாக நீக்கிவிட்டார்கள்.

'Thalaivi' movie latest poster

திரைக்கதையில் வணிக நோக்கில் உண்மைக்கு புறம்பாக மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தும் காட்சிகளை நீக்கும்படி கோரிக்கை வைத்ததுதான், நான் அவமானப்படுத்தப்பட காரணம்.

பத்தாண்டு நட்புக்காக இயக்குநர் விஜய்யிடம் பல இழப்புகளையும், துரோகங்களையும் அனுமதித்துக்கொண்டேன். இதை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. ஆய்வு எழுத்து தொடர்ந்து பல்வேறு கட்டங்களில் திரைக்கதை விவாதத்திலும் ஒன்றரை ஆண்டு உழைப்புக்கு கிடைத்த பலன் முதுகு குத்தல்தான்.

'Thalaivi' writer complaince against movie director AL vijay

இத்தனைக்கும் முந்தின நாள் கூட பேசினேன். அப்போதுகூட இது பற்றி வாய் திறக்காத நண்பர் விஜய், அடுத்த நாள் எனக்கு கிடைக்கப்போகும் அவமானத்தை எண்னி அகமகிழ்ந்திருப்பார் போல.

இப்படி எழுதியதால் எனக்கு முறையாக சேரவேண்டிய சம்பள பாக்கி கொடுக்க மாட்டார்கள். நட்புக்காகக்கூட சினிமாவில் முறையான ஒப்பந்தமில்லாமல் யாரும் பணி புரியவேண்டாம் இதுவே சக எழுத்தாளர்களுக்கு இதன் மூலம் நான் கேட்டுக்கொள்ளும் கோரிக்கை” என்று குறிப்பிட்டுள்ளார்.

கங்கனா ரணாவத் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தலைவி படம் உருவாகி வருகிறது. படம் வரும் ஜூன் மாதம் 26ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் கங்கனா ரணாவத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. இதில் படத்தின் கதையும் உருவாக்கியதும், திரைக்கதையை உருவாக்குவதில் பங்களிப்பு ஆற்றிய எழுத்தாளர், இயக்குநர் அஜயன் பாலாவுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை.

இதைத்தொடர்ந்து படத்தின் இயக்குநர் ஏ.எல். விஜய் தனது முதுகில் குத்தியதாகக் கூறி அவர் மீது புகார் தெரிவித்துள்ளார் அஜயன் பாலா.

ABOUT THE AUTHOR

...view details