தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

எம்ஜிஆரை கண்முன் கொண்டுவரும் அரவிந்த்சாமி - தலைவி படப்பிடிப்பு

தலைவி படத்தில் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள அரவிந்த்சாமியின் புதிய புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின்றன.

தலைவி
தலைவி

By

Published : Dec 24, 2020, 11:15 AM IST

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையைத் தழுவி உருவாகியுள்ள திரைப்படம் தலைவி. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்ததாகப் படக்க்ழு தெரிவித்தது.

ஜெயலலிதாவாக நடிகை கங்கனா நடிக்க, எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த்சாமி நடித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தில் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள அரவிந்த்சாமியின் புகைப்படங்கள் இன்று வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்தனர்.

அறிவித்தபடி எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள அரவிந்த்சாமியின் புதிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. வெள்ளை வேட்டியில் அச்சுஅசலாக எம்ஜிஆர் போலவே இருக்கும் அரவிந்த்சாமியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றன.

எம்ஜிஆரின் நினைவுநாளை முன்னிட்டு தலைவி படத்தின் இப்புகைப்படங்கள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details