தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'தலைவி'யை அடுத்து 4 ஹீரோயின்கள் உள்ள படத்தை சத்தமில்லாமல் இயக்கி முடித்த ஏ.எல்.விஜய்! - தலைவி பட இயக்குநர்

சென்னை: கங்கனாவின் 'தலைவி' படத்தை இயக்கி முடித்துள்ள ஏ.எல். விஜய், தனது அடுத்த படத்தையும் கரோனா ஊரடங்கின் மத்தியில் சத்தமின்றி இயக்கி முடித்துள்ளார்.

vijay
vijay

By

Published : Jun 4, 2021, 10:35 PM IST

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு ’தலைவி’ திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத், எம்ஜிஆர் கதாப்பாத்திரத்தில் அரவிந்த் சாமி ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் அனைத்துப் பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. கரோனா பரவல் காரணமாக இந்தப் படத்தின் வெளியிடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தலைவி படத்தைத் தொடர்ந்து ஏ.எல். விஜய் சத்தமின்றி நான்கு நாயகிகளை மையமாக வைத்து 'அக்டோபர் 31 லேடீஸ் நைட்' என்னும் படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்தப் படத்தில் நிவேதா பெத்துராஜ், மஞ்சிமா மோகன், மேகா ஆகாஷ், ரெபா மோனிகா ஜான் ஆகியோர் நடித்துள்ளனர். சிறப்பு தோற்றத்தில் தெலுங்கு நடிகர் விஷ்வேக் சென் நடித்துள்ளார்.

எப்போதும் குறைந்த நாள்களில் திட்டமிட்டு படத்தை சரியாக எடுத்து முடிக்கும் விஜய், தற்போது ஊரடங்கு சமயத்தில் சரியாக திட்டமிட்டு இந்தப் படத்தை முடித்துள்ளார். ஓடிடி தளத்தில், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர், எந்த ஓடிடி தளத்தில் வெளியாகும் என்பது குறித்தான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details