ஏ.ஆர். முருகதாஸின் 'தர்பார்' படத்தைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு தற்காலிகமாக 'தலைவர் 168' என்னும் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இனிதே ஆரம்பமான 'தலைவர் 168' பட பூஜை! - தலைவர் 168 பட அப்டேட்
'தலைவர் 168' படத்திற்கான பூஜை சென்னையில் இன்று எளிமையான முறையில் நடைபெற்றது.
இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகைகள் கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு ஆதியோர் நடிக்க உள்ளனர். இவர்களுடன் நகைச்சுவை நடிகர் சூரி நடிக்கிறார். இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்க உள்ளார்.
இதையடுத்து, இப்படத்தின் படப்பிடிப்பு பூஜை சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் இயக்குநர் சிவா, ரஜினிகாந்த், மீனா, குஷ்பூ, தொழிநுட்ப கலைஞர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதனை ரசிகர்கள் '#Thalaivar168Poojai' என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி சமூகவலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.