கரோனா தொற்று காரணமாக இந்தியாவில் தேசிய ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி அமல்படுத்தியுள்ளார். இதனால் அனைத்து வித படப்பிடிப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளன. படப்பிடிப்பு இல்லாத காரணத்தினால், சினிமா தொழிலை நம்பியிருக்கும் கூலித்தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா தடுப்புக்கு ரூ 1.25 கோடி வழங்கிய 'தல' அஜித் - ஃபெப்சி
கரோனா தடுப்பு நிதிக்கு நடிகர் அஜித் ரூ. 1.25 கோடி வழங்கியுள்ளார்.
ajith
இதனையடுத்து நடிகர் அஜித் ரூ 1.25 கோடி ரூபாயை கரோனா தடுப்பு நிதியாக வழங்கியுள்ளார். இதில் பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு ரூ 50 லட்சமும், தமிழ்நாடு முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ரூ 50 லட்சமும், ஃபெப்சி தொழிலாளர்களுக்கு ரூ 25 லட்சமும் வழங்கியுள்ளார்.
Last Updated : Apr 7, 2020, 8:16 PM IST