'தல' அஜித்தின் 49ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. வழக்கமாக அஜித் பிறந்த நாளன்று ரசிகர்கள் பட்டாசு வெடித்து, கேக் வெட்டி திருவிழா போல் கொண்டாடுவர். ஆனால், இம்முறை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், அஜித் பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாட முடியாமல் தவித்தனர்.
தூய்மைப் பணியாளர்களுக்கு உதவி செய்த தல ரசிகர்கள்! - thala birthday
சென்னை: 'தல' அஜித் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது ரசிகர்கள், 49 தூய்மைப் பணியாளர்களுக்கு 500 ரூபாய் மதிப்புள்ள உணவுப் பொருட்களை வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் கேக் வெட்டி கொண்டாடுவதற்குப் பதிலாக, அஜித் ரசிகர்கள் தூய்மைப் பணியாளர்களுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளனர். ஆம்... திருவண்ணாமலையில் உள்ள அஜித் ரசிகர்கள், அப்பகுதியில் பணியாற்றும் 49 தூய்மைப் பணியாளர்களுக்கு 500 ரூபாய் மதிப்புள்ள அரிசி, காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்களை வழங்கியுள்ளனர்.
இந்த நிகழ்வின்போது சென்னை மாவட்ட துணைத்தலைவர் அஜித் கணேஷ்ராஜா, செயலாளர் சுமன், நகரச் செயலாளர் அசார், ரசிகர் ரஞ்சித் ஆகியோர் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.