நடிகர் அஜித் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் 'வலிமை' படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது படுவேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தெலுங்கு படமான 'இதி மா கதா' (idhe maa katha) படத்தின் டீசரை பார்த்த நடிகர் அஜித் அப்படத்தின் படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
தெலுங்கு பட டீசருக்கு அஜித் பாராட்டு! - அஜித்தின் வலிமை
தெலுங்கு படம் ஒன்றின் டீசரை பார்த்த அஜித், படக்குழுவினருக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அஜித் கூறுகையில், “எனது நீண்டகால நண்பர் ராம் பிரசாத் என்னிடம் இத்திரைப்படத்தின் டீசரை காட்டினார். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் எனக்கு உண்மையிலேயே பிடித்திருந்தது. எனக்கு பைக் ரைடிங் பிடிக்கும் என்பதால் என்னை எளிதில் டீசருடன் தொடர்புபடுத்திக்கொள்ள முடிந்தது.
படக்குழுவினர் வெற்றியடைய வாழ்த்துகிறேன். விரைவில் உங்களை தனிப்பட்ட முறையில் சந்திப்பேன் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார். அஜித்தின் இந்த பாராட்டுக்கு படக்குழுவினர் நன்றி தெரிவித்துள்ளனர். பைக் பயணத்தை மையமாக வைத்து இதி மா கதா படம் எடுக்கப்பட்டுள்ளது.