தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

செல்பி ரசிகரின் போனை பிடுங்கி, பின்னர் சாரி... தல அஜித்தின் வாக்குப்பதிவு டைரிஸ்

சென்னை: கரோனா காலம் என்பதால் பாதுகாப்பாக வாக்களிக்குமாறு ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்த தல அஜித், மாஸ்க் இல்லாமல் செல்பி எடுக்க வந்த ரசிகரின் செல்ஃபோனை பிடுங்கினார். பின்னர் அவரை எச்சரித்து போனை மீண்டும் கொடுத்ததுடன் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டார்.

Thala ajith shocks fan by grabbing his phone
செஃல்பி ரசிகரின் போனை பிடுங்கிய அஜித்

By

Published : Apr 6, 2021, 2:23 PM IST

ஒவ்வொரு தேர்தலிலும் தனது ஜனநாயக கடமையை எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் தவறாமல் செய்துவரும் தல அஜித், தற்போது நடைபெற்று வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் மனைவி ஷாலினியுடன் காலையில் தனது வாக்கை பதிவு செய்தார்.

வாக்குப்பதிவு செய்த பின்னர் வெளியேறிய தல அஜித்

சென்னை திருவான்மியூரிலுள்ள வாக்குசாவடிக்கு காலை 6.30 மணிக்கே வந்தார். கரோனா காலம் என்பதால் வாக்குப்பதிவு தொடங்கியவுடன், கூட்டம் அதிகமாக சேர்வதற்கு முன்னரே வாக்களிக்க வந்தார் அஜித்.

கையில் கிளவுஸ் அணிந்து மிகவும் பாதுகாப்புடன் வாக்களிக்க தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது ரசிகர்கள் சிலர் அங்கு கூடி அவருடன் செல்பி எடுக்க முற்பட்டனர்.

ரசிகர்களை கூட்டம் கூடாமல் செல்லுமாறு அறிவுறுத்திய அஜித்

ரசிகர் ஒருவர் மாஸ்க் அணியாமல் செல்பி எடுக்க முயற்சி செய்தபோது, அவரது செல்போனை திடீரென பிடுங்கினார் அஜித். இதையடுத்து அவரையும், அங்கு கூடிய ரசிகர்களையும் கூட்டம் கூடாமல் செல்லுமாறு எச்சரித்தார். மேலும், மாஸ்க் அணியாதவர்களை அணியுமாறு அறிவுறுத்தினார்.

செஃல்பி ரசிகரின் போனை பிடுங்கிய தல அஜித்

இதைத்தொடர்ந்து வாக்களிக்கு முன் வரிசையில் நின்ற அஜித், ரசிகரிடமிருந்து பிடுங்கிய போனை அவரை எச்சரித்த பின் மீண்டும் கொடுத்தார். அத்துடன் வாக்களித்து வந்தபின் ரசிகர்களைப் பார்த்து தனது செயலுக்கு சாரி என்று சொல்லி அங்கிருந்து புறப்பட்டார்.

ரசிகரிடம் பிடுங்கிய போனை அவரிடம் மீண்டும் கொடுத்த அஜித்

இதையும் படிங்க: கரோனாவிலிருந்து மீண்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

ABOUT THE AUTHOR

...view details