ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இரண்டு படங்களில் அஜித்தை புக் செய்தார். இந்த இரண்டு படங்களையும் ஹெச். வினோத் இயக்குவது உறுதி செய்யப்பட்டது. அதன்படி முதல் படமாக 'பிங்க்' படத்தை ரீமேக் செய்து, 'நேர்கொண்ட பார்வை' படத்தை ஹெச். வினோத் இயக்கினார். இந்தப் படம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றியடைந்தது.
#Valimai - தல ஆட்டம் ஆரம்பம்!
அஜித் நடிப்பில் உருவாகவுள்ள 60ஆவது படத்துக்கு ‘வலிமை’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
தற்போது 'தல' அஜித்தின் இரண்டாவது படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. இந்தப் படத்துக்கு ‘வலிமை’ (valimai) என தலைப்பிடப்பட்டுள்ளது. சென்டிமென்ட் போலீஸ் ஸ்டோரியாக உருவாகவுள்ள இந்தப் படத்தில் அஜய் தேவ்கன், அருண் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தில் பணிபுரியும் தொழில்நுட்பக் கலைஞர்கள், மற்ற நடிகர்கள் பற்றிய தகவல்கள் வெகு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: சோலோ காமெடி வேடம் கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் - நடிகர் சாம்ஸ்