ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ள படம் ‘நேர்கொண்ட பார்வை’. இதில் ஷ்ரதா ஸ்ரீநாத், வித்யா பாலன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்தியில் வெளியான ‘பிங்க்’ படத்தின் ரீமேக்காக இத்திரைப்படம் உருவாகியுள்ளது. போனி கபூர் தயாரித்துள்ள இத்திரைப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவை கவனித்திருக்கிறார். தற்போது இதன் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
#NerkondaPaaravaiTrailer: ஓங்கி ஒலிக்கிறது நீதிதேவன் குரல்! - ஹெச் வினோத்
ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
NK paarvai
ட்ரெய்லரில் திரை முழுவதும் அஜித் நிறைந்திருக்கிறார். யுவனின் பின்னணி இசையும், நீரவ் ஷாவின் ஒளிப்பதிவும் அழகாக அமைந்துள்ளது. வழக்கறிஞராக வரும் அஜித்தின் குரல் ஓங்கி ஒலிக்கிறது. இதனால் அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களை அமர்க்களப்படுத்தி வருகின்றனர். திரைத்துறை பிரபலங்களும் இந்த ட்ரெய்லரை ஷேர் செய்துவருகின்றனர். இந்தத் திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.