தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சமூக வலைதளத்தில் 'வலிமை'யான சாதனை படைக்கும் 'நாங்க வேற மாறி'! - நாங்க வேற மாறி பாடல்

சென்னை: அஜித் நடிப்பில் உருவாகி வரும் 'வலிமை' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'நாங்க வேற மாறி' பாடல் சமூக வலைதளத்தில் புதிய சாதனையைப் படைத்துள்ளது.

valimai
valimai

By

Published : Aug 3, 2021, 6:36 PM IST

ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'வலிமை'. போனி கபூர் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறையை முடியும் தருவாயில் உள்ளது.

சில சண்டைக்காட்சிகளுக்காக அஜித் உள்ளிட்ட படக்குழு ரஷ்யா செல்லவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் மோஷன் போஸ்டர், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமூக வலைதளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று பல சாதனைகளைப் புரிந்தது.

இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட்.02) இரவு 10.45 மணிக்கு 'வலிமை' படத்தின் முதல் பாடலான 'நாங்க வேற மாறி' வெளியானது. விக்னேஷ் சிவன் எழுதிய இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

'நாங்க வேற மாறி' லிரிக்கல் வீடியோவில் அஜித் ஸ்டைலிஷாக இருப்பதை பார்த்த தல ரசிகர்கள் ட்விட்டரில் #Valimai, #Naangaveramadhiri, #Aijth போன்ற ஹேஷ் டேக்குகளை இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இப்பாடல் வெளியாகி இன்னும் 24 மணிநேரம் ஆகாத நிலையில், இப்பாடலை இது வரை சமூக வலைதளத்தில், 70 லட்சம் பேர் பார்த்துள்ளனர். மேலும் சமூக வலைதளமான யூ-ட்யூப்பில் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் இப்பாடல் உள்ளது.

இதன்மூலம் விஜய்யின் 'பிகில்' படத்தின் 'வெறித்தனம்' லிரிக்கல் வீடியோ, 'மாஸ்டர்' படத்தின் 'குட்டி ஸ்டோரி' லிரிக்கல் வீடியோ 24 மணிநேரத்தில் படைத்த சாதனையை 'வலிமை' பாடல் முறியடித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: 'வலிமை அப்டேட்' - திடீர் மாற்றத்தை எடுத்திருக்கும் படக்குழு

ABOUT THE AUTHOR

...view details