நடிகர் அஜித் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் 'வலிமை' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அஜித்தின் பிறந்தநாளான மே 1ஆம் தேதி வெளியாகிறது.
வைரலாகும் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம்!
சென்னை: அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ajith
அண்மையில், தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அஜித் வாக்களித்த புகைப்படங்கள், முகக்கவசம் அணியாமல் செல்ஃபி எடுக்கவந்த ரசிகரின் மொபைல் போனை பறித்துக்கொண்ட வீடியோ, பின் அந்த ரசிகரிடம் வருத்தம் தெரிவித்து செல்போனை திருப்பி கொடுத்தது போன்றவை சமூகவலைதளத்தில் வைரலானது.
இந்நிலையில், தற்போது புளூ கலர் ஷர்ட்டுன் வட்டார போக்குவரத்து அலுவலத்திற்கு சென்ற அஜித்தின் லேட்டஸ் புகைப்படம், சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.