சென்னை: தல அஜித்குமார் மகள் அனோஷ்காவின் பிறந்தநாளை சமூக வலைதளத்தில் டிரெண்டாக்கிய ரசிகர்கள், தந்தை - மகள் பாசம் குறித்து பல்வேறு வாசகங்களைப் பதிவிட்டு கொண்டாடிவருகிறார்கள்.
தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதியான அஜித்குமார் - ஷாலினி ஆகியோருக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளார்கள்.
2008 ஜனவரி 3ஆம் தேதி அஜித் - ஷாலினி தம்பதிக்கு அனோஷ்கா பிறந்தார். அப்போதிலிருந்தே அவரை தங்கள் வீட்டுப் பிள்ளையாக பாவித்துவந்தனர் தல ரசிகர்கள். இதைடுத்து அனோஷ்காவின் குழந்தை தோற்றத்திலிருந்து அவரது வளர்ச்சி ஒவ்வொன்றையும் இணையத்தில் பகிர்ந்து கொண்டாடிவருகிறார்கள்.
அனோஷ்காவின் பிறந்தநாளை முன்னிட்டு ஜனவரி 3ஆம் தேதியான இன்று #HBDAnoushkaAjith என்ற ஹேஷ்டேக்கில் அவரது பிறந்தநாளை ரசிகர்கள் டிரெண்டாக்கியுள்ளனர்.