தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மீண்டும் திரையரங்குகளில் 'பில்லா': உற்சாகத்தில் தல ரசிகர்கள்! - அஜித்தின் பில்லா

அஜித் நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த 'பில்லா' திரைப்படம் நேற்று (மார்ச் 12) மீண்டும் திரையரங்கில் வெளியானதையடுத்து அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

billa
billa

By

Published : Mar 13, 2021, 7:44 AM IST

அஜித் கதாநாயகனாக நடித்த 'பில்லா' திரைப்படம் 2007ஆம் ஆண்டில் வெளியானது. விஷ்ணுவர்தன் இயக்கிய இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். பிரபு, ரகுமான், சந்தானம் உள்ளிட்டோருடன் முக்கியக் கதாபாத்திரத்தில் நமீதா நடித்திருந்தார். இது ரஜினி நடிப்பில் 1980ஆம் ஆண்டு வெளியான 'பில்லா' படத்தின் ரீமேக் ஆகும்.

நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் உருவான பில்லா திரைப்படம், முழுக்க முழுக்க மலேசியாவில் படமாக்கப்பட்டது. ஆனந்தா பிக்சர் சர்க்யூட் என்ற நிறுவனத்தின் சார்பில் எல்.சுரேஷ் தயாரித்திருந்த இந்தத் திரைப்படம், வசூலிலும் புதிய சாதனையைப் படைத்து, அஜித்துக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

கோட்சூட்டில் ஸ்டைலிஷான கேங்கஸ்டராக அஜித் நடித்த இந்தப் படம் நேற்று (மார்ச் 12) திரையரங்குகளில் மீண்டும் வெளியானது. அஜித்தின் படம் திரையரங்குகளில் வெளியாகி நீண்ட நாள்கள் ஆகியுள்ள நிலையில், 'பில்லா' படத்தை அவரது ரசிகர்கள் தற்போது மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டாடி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details