’நேர்கொண்ட பார்வை’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஹெச். வினோத் - அஜித் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இது குறித்து முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் தயாரிப்பு நிறுவனமான ’பே வியூவ் ப்ராஜெக்ட்ஸ் (BayView Projects) இதனை தயாரிக்கிறது. ‘இங்கிலிஷ் விங்கிலிஷ்’ படத்தில் ஸ்ரீதேவியுடன் சிறப்புத் தோற்றத்தில் நடித்த அஜித், பே வியூவ் ப்ராஜெக்ட்ஸ் தயாரிப்பில் நடிப்பதாக வாக்கு கொடுத்திருந்தார். இந்தச் சூழலில் நடிகை ஸ்ரீதேவி காலமானார். ஸ்ரீதேவியின் ஆசையை நிறைவேற்ற அவரது கணவர் போனி கபூர், அஜித்தை இரண்டு படங்களில் புக் செய்தார்.
பூஜையுடன் தொடங்கியது தல 60! - அஜித்
ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும்‘ தல 60’ திரைப்படம் இன்று பூஜையுடன் தொடங்கியது.
Thala 60
’பிங்க்’ ரீமேக்கான ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம்தான் அந்த முதல் படம். தற்போது இரண்டாவது திரைப்படம் பூஜையுடன் தொடங்கியுள்ளது. ஹெச். வினோத் இயக்கும் இந்தப் படத்தில் அஜித் காவலராக நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்துக்கு அனிருத் அல்லது ஜிப்ரான் இசையமைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.