தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சர்வதேச விருது வென்ற 'தேன்' திரைப்படம்! - அசுரன்

இந்தப் படம் 51ஆவது பனோரமா சர்வதேச திரைப்பட விழாவில் (2020) திரையிடப்படுவதற்காகத் தேர்வாகியது. இதனுடன் வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் வந்த அசுரன் படமும் தேர்வானது.

Thaen movie
Thaen movie

By

Published : Jan 7, 2021, 7:33 PM IST

சென்னை: கோவாவில் நடைபெற்று வரும் 51ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் தேன் திரைப்படம் விருது வென்றுள்ளது.

தருண்குமார், அபர்ணதி நடிப்பில் கணேஷ் விநாயகன் இயக்கியுள்ள திரைப்படம் "தேன்". இப்படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருதுகளை குவித்து வருகிறது. இந்தப் படம் 51ஆவது பனோரமா சர்வதேச திரைப்பட விழாவில் (2020) திரையிடப்படுவதற்காகத் தேர்வாகியது. இதனுடன் வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் வந்த அசுரன் படமும் தேர்வானது.

தற்போது தேன் திரைப்படம் இறுதிப் போட்டியில் வெற்றிபெற்று விருதினை பெற்றுள்ளது. இதற்கான விழா வரும் 25ஆம் தேதி நடைபெற உள்ளது. இது தொடர்பாக இப்படத்தின் இயக்குநர் கணேஷ் விநாயகன் நடுவர்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details