ஊரடங்கு நேரத்திலும் நடிகர் சல்மான் கான் தன்னை பிஸியாக வைத்துள்ளார். மஹாராஷ்டிராவில் உள்ள பண்ணை வீட்டில் தனது குடும்பம் மற்றும் நண்பர்களுடன் தங்கியுள்ள இவர் அங்கு நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுடன் இணைந்து, ‘தேரே பீனா' என்ற மியூசிக் வீடியோவிற்கான ஷுட்டிங்கை நடத்தி முடித்ததாக அறிவித்தார்.
மேலும் அப்பாடலின் வீடியோ இன்று வெளியாகும் என்று அறிவித்திருந்தார். இந்நிலையில் சல்மான் கான் அறிவித்தது போல் ’தேரே பினா’ பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது. பாடல் முழுவதும் சல்மான் கான், ஜாக்குலின் ஆகியோர் இணைந்து ரொமான்ஸ் செய்த காட்சிகள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.