யாருடா மகேஷ், மாநகரம் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் சுந்தீப் கிஷன். இவர் தமிழ், தெலுங்கு என இரு மொழிப் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது சுந்தீப் நடிப்பில் உருவாகியுள்ள ‘தெனாலி ராமகிருஷ்ணா பி.ஏ., பிஎல்’ படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
1 கேஸ் கொடுத்தா 2 கேஸ் இலவசம் - தெனாலி ராமகிருஷ்ணா பி.ஏ., பி.எல்! - sundeep kishan
சுந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள ‘தெனாலி ராமகிருஷ்ணா பி.ஏ., பி.எல். படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
![1 கேஸ் கொடுத்தா 2 கேஸ் இலவசம் - தெனாலி ராமகிருஷ்ணா பி.ஏ., பி.எல்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4448348-482-4448348-1568547212570.jpg)
Tenali Ramakrishna BA BL teaser
காமெடி கலந்த ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள இதனை நாகேஷ்வர் ரெட்டி இயக்கியுள்ளார். இதில் சுந்தீப், ஹன்சிகா, வரலட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு சாய் கார்த்திக் இசையமைத்துள்ளார். கோர்ட் காமெடி படங்கள் தெலுங்கில் அதிகமாக வராததால், இதற்கு நல்ல வரவேற்பு இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.