திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள பேரிஜம் வனப்பகுதிக்கு முறையான அனுமதியின்றி நடிகர்கள் சூரி, விமல் உள்ளிட்டோர் சமீபத்தில் சென்றனர்.
அதுமட்டுமின்றி, அங்குள்ள ஏரியில் தடையை மீறி, அவர்கள் மீன் பிடித்ததாகக் கொடைக்கானலைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து வனப்பகுதிக்குள் அனுமதியின்றி சென்ற நடிகர் விமல், சூரி உள்பட நான்கு பேருக்கு தலா இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.