தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

தெலுங்கு நடிகர் ராம் சரணின் ஒயில்டு லைஃப் போட்டோகிராபி - undefined

திரையில் நடிப்பு, திரைக்கு வெளியே போட்டோகிராபியில் ஆர்வத்தை கொண்டுள்ளவராகத் திகழ்கிறார் தெலுங்கு நடிகர் ராம் சரண்.  இவர் உலக வனவிலங்கு நிதிக்காக தனது ஒயில்டு லைஃப் புகைப்படங்களை காட்சிப்படுத்தவுள்ளார்.

Ram Charan debut as wildlife photographer
Telugu actor Ram charan

By

Published : Dec 19, 2019, 5:40 PM IST

ஹைதராபாத்: ஒயில்டெஸ்ட் ட்ரீம்ஸ் என்ற பெயரில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சியில் உலகின் பல முன்னணி வனவிலங்கு போட்டோகிராபர்களின் புகைப்படங்களுடன் தான் எடுத்த சிறந்த வனவிலங்கு புகைப்படங்களையும் காட்சிப்படுத்தவுள்ளார் தெலுங்கு நடிகர் ராம் சரண்.

ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் ட்ரிபிள்ஆர் படத்தில் என்டிஆருடன் இணைந்து நடித்து வருகிறார் ராம்சரண். சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற 'தபாங் 3' படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர், சல்மானுடன் இணைந்து நடனமாடி ரசிகர்களை குஷிப்படுத்தினார்.

இதைத்தொடர்ந்து அடுத்த சர்ப்ரைசாக தான் எடுத்த சிறந்த வனவிலங்கு புகைப்படங்களை ஒயில்டெஸ்ட் ட்ரீம்ஸ் என்ற நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தவுள்ளார். உலக வனவிலங்கு நிதிக்காக நடத்தப்படும் இந்த நிகழ்வில், புகழ்பெற்ற வனவிலங்கு புகைப்படக் கலைஞர்களான ஷாஸ் ஜங், இஜாஸ் கான், இஷெட்டா சல்கோகர் ஆகியோரின் புகைப்படங்களும் இடம்பெறவுள்ளது.

மேலும் இவர்கள் தங்களது புகைப்படங்கள் மூலமாக பொதுமக்களுக்கு விழப்புணர்வு அளிக்கவுள்ளனர்.

இதுகுறித்து ராம் சரண் கூறியதாவது,

நாம் அனைவரும் இயற்கையை சார்ந்தே இருக்கிறோம். வனவிலங்கு பாதுகாப்பை வலியுறுத்தி எனக்குள் இருக்கும் ஆர்வத்தை எனது கேமரா மூலம் வெளிப்படுத்தவுள்ளேன் என்றார்.

இதையும் படிங்க: ராஜமௌலியின் 'RRR' - மகனை பார்த்து கண்கலங்கிய சிரஞ்சீவி!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details