தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

தாஜ்மஹாலில் 10ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடிய 'ஸ்டைலிஷ் ஸ்டார்' - தாஜ்மஹாலில் அல்லு அர்ஜுன்

தாஜ்மஹாலில் நடிகர் அல்லு அர்ஜுன் தனது மனைவியுடன் திருமண நாளை கொண்டாடிய புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Allu Arjun
Allu Arjun

By

Published : Mar 7, 2021, 7:51 PM IST

தெலுங்கு சினிமாவின் 'ஸ்டைலிஷ் ஸ்டார்' என அழைக்கப்படுபவர் நடிகர் அல்லு அர்ஜுன். இவர் தனது நடனத்தால் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ளார். 2011ஆம் ஆண்டு மார்ச் 6ஆம் தேதி இவர், ஸ்னேகா ரெட்டி என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு அல்லு அயன் என்ற மகனும் அல்லு அர்ஹா என்ற மகளும் உள்ளனர்.

இவர்களுக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆன நிலையில், இருவரும் நேற்று (மார்ச் 6) காதலின் சின்னமான தாஜ்மஹாலுக்கு சென்று திருமண நாளை கொண்டாடினார். தாஜ்மஹால் முன்பு இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை நடிகர் அல்லு அர்ஜூன் சமூகவலைத்தளபக்கத்தில் பதிவிட்டதை அடுத்து அவை தற்போது வைரலாகி வருகின்றன.

ABOUT THE AUTHOR

...view details