பாலிவுட்டில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகி சக்கைபோடு போட்ட 'பிங்க்' படத்தை தமிழில் 'நேர்கொண்ட பார்வை' என்ற பெயரில் ரீமேக் செய்தனர். அஜித் நடித்திருந்த அப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றது.
பவன் கல்யாணின் 'லாயர் சாப்' - வெளியாகும் தேதியை அறிவித்த தயாரிப்பாளர் - பவன் கல்யாணின் லாயர் சாப்
பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் 'லாயர் சாப்' திரைப்படம் வெளியாகும் தேதியை தயாரிப்பாளர் கூறியுள்ளார்.
இதையடுத்து பிங்க் திரைப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. அமிதாப் பச்சன் நடித்த கதாபாத்திரத்தில் பவன் கல்யாண் நடித்துவருகிறார். 'லாயர் சாப்' என்று பெயரிட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.
இதில் பவன் கல்யாணுடன் நடிகை அஞ்சலி, நிவேதா தாமஸ், அனன்யா நாகலா ஆகியோர் நடிக்கின்றனர். இதை தில் ராஜூ தயாரிக்கிறார். ஸ்ரீ வெங்கடேஷ் கிரியேஷன் சார்பில் வேணு ஸ்ரீராம் வெளியிடுகிறார். தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படம் மே 15ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பாளர் தில் ராஜூ கூறியுள்ளார்.