பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி, கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, அவர் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகிறார். அவர் மீண்டும் உடல் நலம்பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று திரை பிரபலங்கள் தங்களது பிரார்த்தனைகளை சமூக வலைதளங்களில் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில், தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது, "கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதை வென்றவர், தேசமே பெருமைப்படும் அற்புதமான கலைஞர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். என் சகோதரர் சிகிச்சையில் முன்னேறி வருகிறார் என்பதை அறிந்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த விஷயத்தை உங்களிடமும் பகிர்கிறேன்.