தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

தெலுங்கு எனக்கு இன்னொரு வீடுபோலத்தான் - ஸ்ருதிஹாசன் - தெலுங்கு சினிமா அப்டேட்

தெலுங்கு சினிமா எனக்கு ஒரு வீடு போலத்தான் என்று நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.

shruti haasan

By

Published : Nov 20, 2019, 3:02 PM IST

தமிழ், தெலுங்கு, இந்தி என பிஸியாக நடித்துவரும் ஸ்ருதிஹாசன், தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் வலம் வருகிறார். அமெரிக்கன் தொலைக்காட்சித் தொடர் ஒன்றில் நடிப்பதன் மூலம் ஹாலிவுட்டிலும் காலெடுத்து வைத்துள்ளார்.

தற்போது இவர் 'ஃப்ரோசன் 2' படத்தில் 'எல்சா' என்னும் கதாபாத்திரத்திற்கு டப்பிங்கும் கொடுத்துள்ளார். இசையமைப்பாளர், பாடகர், நடிகை, ட்ப்பிங் ஆர்ட்டிஸ்ட் என பன்முகத் தன்மையுடன் இவர் வலம் வந்துகொண்டிருக்கிறார்.

இவர் சமீபத்தில் தெலுங்கு சினிமா புரோமேஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது அவர் கூறுகையில், தெலுங்கு திரைப்படங்களில் நடிப்பதென்பது எனக்கு மகிழ்ச்சியான ஒன்று. தமிழ் பெண்ணாக இருந்தாலும் தெலுங்கு ரசிகர்கள் எனக்கு அன்பும் ஆதரவும் தருகின்றனர். மேலும் தெலுங்கில் இருந்துதான் என்னுடைய சினிமா வெற்றியைத் தொடங்கியது. எனவே தெலுங்கு சினிமா எனக்கு ஒரு வீடு போலத்தான் என்று கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details