தெலுங்கில், 'ஹிட்', 'போணி', 'ஜார்ஜ் ரெட்டி' உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்தவர் தும்மல நரசிம்ஹா ரெட்டி என்கிற ’டிஎன்ஆர்’. இவர் நடிகராக மட்டுமல்லாது 'ஃபிராங்க்ளி வித் டிஎன்ஆர்' என்கிற யூடியூப் நிகழ்ச்சியையும் தொகுத்து வந்தார். இந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலரையும் இவர் நேர்காணல் செய்துள்ளார்.
கரோனா தொற்றுக்கு பலியான நடிகர் டிஎன்ஆர்! - நடிகர் டிஎன்ஆர் பலி
ஹைதராபாத்: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த தெலுங்கு நடிகர் டிஎன்ஆர், சிகிச்சைப் பலனின்றி இன்று (மே.10) உயிரிழந்தார்.
TNR
இந்நிலையில், சமீபத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட டிஎன்ஆர், முதலில் அவரது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார். அப்போது அவருக்கு ஆக்ஸிஜன் அளவு குறைந்ததை அடுத்து சிகிச்சைக்காக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்படார். இந்நிலையில், இன்று (மே.10) சிகிச்சைப் பலனின்றி டிஎன்ஆர் காலமானார். இவரது மறைவுக்கு தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.