தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

நடிகர் மகேஷ் பாபு அண்ணன் காலமானார்! - telugu cinema celebrity died

நடிகர் மகேஷ் பாபுவின் மூத்த சகோதரர் ரமேஷ் பாபு (58) காலமானார். அவருக்கு வயது 56.

Actor Ghattamaneni Ramesh Babu
நடிகர் கட்டமனேனி ரமேஷ் பாபு

By

Published : Jan 9, 2022, 7:49 AM IST

Updated : Jan 9, 2022, 1:22 PM IST

ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகில் பழம்பெரும் நடிகரான கிருஷ்ணாவின் மூத்த மகனான நடிகர் கட்டமனேனி ரமேஷ் பாபு நேற்று(ஜன.8) உயிரிழந்தார்.

முன்னதாக அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவரை உடனடியாக கச்சிபவுலியில் உள்ள ஏஐஜி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவரின் உயிரை காப்பற்றும் முயற்சியில் உயிர் காக்கும் சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனளிக்காமல் ரமேஷ் பாபு உயிரிழந்தார்.

இவரின் திடீர் உயிரிழப்பு தெலுங்கு திரையுலகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ரமேஷ் பாபுவின் மறைவிற்கு திரைப் பிரபலங்கள் உள்பட பொதுமக்கள் பலரும் சமூக வலைதளங்களில் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் கிருஷ்ணா, மகேஷ் பாபு, ரமேஷ் பாபு

சமீபத்தில் தனக்கு கரோனா தொற்று இருப்பதாகக் நடிகர் மகேஷ் பாபு, தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப் பூர்வமாக அறிவித்தார். தற்போது சிகிச்சையில் இருக்கும் இவர், தனது சகோதரரின் இறுதி சடங்கில் எவ்வாறு கலந்துகொள்வார் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

இதையும் படிங்க: உணவுக்கு வழியில்லாமல் அவதிப்படும் நடிகை ரங்கம்மாள் பாட்டி

Last Updated : Jan 9, 2022, 1:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details