தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இறுதிக்கட்டத்தை நோக்கி 'சைரா நரசிம்ம ரெட்டி' - விஜய் சேதுபதி

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடித்துவரும் 'சைரா நரசிம்ம ரெட்டி' படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடையும் தருவாயில் உள்ளன.

சிரஞ்சீவி

By

Published : Jun 25, 2019, 1:36 PM IST

தெலுங்கு சினிமாவில் வசூல் மன்னனாக இருந்தவர் சிரஞ்சீவி. எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் வெற்றி நாயகனாக மகுடம் சூடிய இவர் மீது ரசிகர்கள் தனிமரியாதை வைத்துள்ளனர். தெலுங்கு சினிமாவில் புகழின் உச்சியில் இருந்தபோதே ரசிகர்களின் பலத்தோடு அரசியலில் இறங்கினார். பிரஜா ராஜ்ஜியம் என்னும் கட்சியின் தலைவராக இருக்கிறார்.

சிரஞ்சீவி

அரசியல் வாழ்க்கைக்கு வந்தபிறகு சினிமாவை விட்டு விலகியிருந்த சிரஞ்சீவி, நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சினிமாவிற்குள் வந்தார். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி படத்தின் தெலுங்கி ரீமேக்கான 'கைதி 150' என்ற படத்தில் நடித்தார். இப்படம் வசூல் ரீதியாக அமோக வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் மூலம் ரசிகர்களின் ஆதரவைப் பெற்றதில் பெருமகிழ்ச்சியடைந்தார். இந்நிலையில், 'கைதி 150' படத்தைத் தொடர்ந்து வரலாற்று சரித்திரப் படமான 'சைரா நரசிம்ம ரெட்டி' படத்தில் நடிக்க ஆரம்பித்தார். 2017ஆம் ஆண்டு தொடங்கிய இப்படத்துக்கான படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது.

சைரா நரசிம்ம ரெட்டி

200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிக பிரமாண்டமாக உருவாகும் இப்படத்தில் நயன்தாரா, சுதீப், அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மேலும், நடிகை அனுஷ்கா சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். ஒன்றரை வருடங்களாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 'சைரா நரசிம்ம ரெட்டி' திரைப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

விஜய் சேதுபதி, சுதீப்

படத்தில் விடுபட்ட காட்சிகள் நேற்று முழுவதும் எடுக்கப்பட்டுவிட்டதாக தெரிகிறது. மேலும் இப்படம் வருகின்ற அக்டோபர் 2ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details