தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'ஃபில்டர் காபி அந்த்தே... ஸ்ரீவி. பில்டர் காபி' - சிலாகித்த பிரபல தெலுங்கு நடிகர் - Srivelliputhur filter coffee

பிரபல நகைச்சுவை நடிகர் வெண்ணிலா கிஷோர் தமிழ்நாட்டில் குடித்த ஃபில்டர் காபி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் சிலாகித்துள்ளார்.

Venila Kishore
Venila Kishore

By

Published : Feb 12, 2020, 10:41 PM IST

தெலுங்கு சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் வலம் வருபவர் வெண்ணிலா கிஷோர். இவர் தெலுங்கில் நாகர்ஜூனா, மகேஷ் பாபு, பிரபாஸ், நானி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார்.

இதனையடுத்து வெண்ணிலா கிஷோர் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் 'திருடன் போலீஸ்' இயக்குநர் கார்த்திக் ராஜூ இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தென்காசி, செங்கோட்டை, ராஜபாளையம் உள்ளிட்ட பகுதியில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் ரெஜினா நடிக்கிறார். இதில் வெண்ணிலா கிஷோர் கலந்துகொண்டு நடித்து வருகிறார். அப்போது விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் நடத்திவரும் தேநீர் கடையில் ஃபில்டர் காபி குடித்துள்ளார்.

இந்த ஃபில்டர் காபி அவருக்கு பிடித்துப் போகவே, 'ஃபில்டர் காபினா... இது தான் ஃபில்டர் காபி' என்று சிலாகித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாது மூன்று கிலோ பால்கோவா வாங்கியுள்ளதாகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இவரின் இந்தப் பதிவு தெலுங்கு ரசிகர்களிடம் ஃபில்டர் காபியைப் பிரபலப்படுத்தியுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா பிரபலமான நிலையில், இவரின் இந்த ட்வீட்டால் ஸ்ரீவில்லிபுத்தூர் ஃபில்டர் காபியும் பிரபலமாகி வருகிறது.

இதையும் படிங்க:

என்னடா இது ஆஸ்கருக்கு வந்த சோதனை...

ABOUT THE AUTHOR

...view details