தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

வசந்தபாலன் படத்தில் இணைந்த தொலைக்காட்சி பிரபலம்! - அறந்தாங்கி நிஷா

வசந்தபாலன் இயக்கும் புதிய திரைப்படத்தில் பிரபல தொலைக்காட்சி பிரபலம் ஒருவர் இணைந்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

வசந்தபாலன்
வசந்தபாலன்

By

Published : Aug 10, 2021, 2:14 PM IST

'வெயில்', 'அங்காடித் தெரு', ஆகிய வெற்றிப் படங்களை இயக்கியவர் வசந்தபாலன். இவர் தற்போது, அர்ஜுன் தாஸை நாயகனாக வைத்து புதிய படம் ஒன்றை இயக்கிவருகிறார். இதில் நாயகியாக 'சார்பட்டா பரம்பரை' படத்தில் நடித்த துஷாரா விஜயன் நடிக்கிறார்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் இப்படத்தில் இடம்பெற்றுள்ள நட்சத்திரங்கள் குறித்து தினமும் படக்குழு வெளியிடுகின்றது.

அந்தவகையில் இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, நடிகை வனிதா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகப் படக்குழு அறிவித்திருந்தது. தற்போது இதில் தொலைக்காட்சி பிரபலமான அறந்தாங்கி நிஷா, நடிகர் பவா லட்சுமணன் ஆகியோர் இணைந்திருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வசந்தபாலன்

ஏற்கெனவே வசந்தபாலன் இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ’ஜெயில்’ திரைப்படத்தின் பணிகள் நிறைவடைந்த நிலையில், ரிலீஸ் தேதிக்காக காத்திருக்கிறது.

இதையும் படிங்க:வெளிநாட்டில் ஷுட்டிங்... குடும்பத்தை கையோடு அழைத்து சென்ற கங்கனா

ABOUT THE AUTHOR

...view details