தமிழ் திரையுலகின் முன்னணி ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான கே.வி. ஆனந்த் இன்று அதிகாலை (ஏப்ரல் 30) மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரின் மறைவுக்கு ரசிகர்களும் திரைப்பிரபலங்களும் சமூக வலைதளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கே.வி. ஆனந்த் எனும் நல்ல மனிதரை இழந்துவிட்டோம் - அல்லு அர்ஜுன் - கே.வி. ஆனந்த் மறைவு
சென்னை: கே.வி. ஆனந்த் எனும் நல்ல மனிதரை இழந்துவிட்டோம் என தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் தனது ட்விட்டரில் கே.வி. ஆனந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் கே.வி. ஆனந்தின் மறைவுக்கு தனது ட்விட்டர் வாயிலாக இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், "இன்று காலை கே.வி.ஆனந்த் இறந்து விட்டார் என்ற சோகமான செய்தியை கேட்டு எழுந்தேன். அற்புதமான ஒளிப்பதிவாளர், சிறந்த இயக்குநர், அன்பான நல்ல மனிதர். உங்களை நாங்கள் இழந்துவிட்டோம். நீங்கள் எப்போதும் எங்கள் நினைவில் இருப்பீர்கள். கே.வி. ஆனந்தின் குடும்பத்தினர், உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்" என பதிவிட்டுள்ளார்.