இயக்குநர் சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், நயன்தாரா, விஜய் சேதுபதி, தமன்னா, கிச்சா சுதீப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் 'சைரா நரசிம்மா ரெட்டி'. சுதந்திரப் போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்மா ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகியுள்ளது. சமீபத்தில் இப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தைப் பெற்று வருகிறது.
தசாரா வாழ்த்துகளை தெரிவிக்க சிரஞ்சீவி தெலங்கானா ஆளுநர் தமிழிசையை செளந்தரராஜனை சந்தித்தார். அப்போது அவர் சைரா நரசிம்மா ரெட்டி திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்று வேண்டுக்கோள் விடுத்தார். அவரின் வேண்டுகோளை விரைவில் நிறைவேற்றுவேன் என்று தமிழிசை உறுதியளித்திருந்தார்.