தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

’தேவைகளைக் குறைத்துக்கொண்டால் நிம்மதியாக வாழலாம்’ - நடிகர் கார்த்தி - சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை: தேவைகளைக் குறைத்துக்கொண்டால் நிம்மதியாக வாழலாம் என்பதை கரோனா கற்றுக் கொடுத்துவிட்டது என்று நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

கார்த்தி
கார்த்தி

By

Published : Mar 24, 2021, 4:14 PM IST

இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சுல்தான்’. ட்ரீம் வாரியர் பிக்ஷர்ஸ் சார்பில் எஸ்.ஆர். பிரபு தயாரித்துள்ள இதில் ராஷ்மிகா மந்தனா, நெப்போலியன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் கார்த்தி, ராஷ்மிகா, இயக்குநர் பாக்யராஜ் கண்ணன், ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய கார்த்தி, “நான் நீண்ட நாள்களுக்குப் பிறகு சினிமா நிகழ்ச்சியில் பங்கேற்பது உறவினர் திருமண விழாவிற்குச் சென்றதுபோல் உள்ளது. நமக்குத் தேவைகள் கொஞ்சம்தான். தேவைகளைக் குறைத்துக்கொண்டால் நிம்மதியாக வாழலாம் என்பதை இந்தக் கரோனா கற்றுக்கொடுத்துள்ளது.

சாதாரணமாகத் தலைமைப் பொறுப்பை எடுத்துக்கொள்ள முடியாது. யாரும் அவ்வளவு சாதாரணமாகத் தலைமையை ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள் என்பதை நம் தமிழ்நாட்டிலேயே பார்த்துள்ளோம். எனக்குப் படத்தின் கதையைக் கேட்டுப் புல்லரித்தது. விரைவில் உங்களைத் திரையரங்குகளில் சந்திக்கிறேன்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details