இயக்குநர் சக்தி செளந்தரராஜன் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில், கடந்த மார்ச் மாதம் வெளியான படம் டெடி. சாயிஷா, சதீஷ், மகிழ் திருமேனி, மாசூம் ஷங்கர், சாக்ஷி அகர்வால் உள்ளிட்டோர் இதில் நடித்திருந்தனர்.
கோமாவுக்குச் சென்ற ஹீரோயினின் எனர்ஜி டெடியில் நுழைந்துவிடுகிறது. பின் அதிலிருந்து எப்படி மீண்டும் ஹீரோயினின் எனர்ஜி அவரது உடலுக்குள் நுழைகிறது என்பதுவே படத்தின் மீதிக் கதை.
இந்நிலையில் 'டெடி' படம் வெற்றிபெற்ற நிலையில், படத்தின் இயக்குநர் சக்தி செளந்தரராஜனுக்கு, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கார் ஒன்றைப் பரிசாகக் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து சக்தி செளந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில், "டெடி திரைப்படம் எனக்கு எப்போதும் பிடித்தமான படம். இதனை மேலும் சிறப்பாக்கும் வகையில், அற்புதமான செயலை செய்த ஞானவேல் ராஜாவுக்கு நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:தமன்னா...சமந்தா...வழியை பின் தொடர்ந்த த்ரிஷா!