ஊரடங்கு உத்தரவால் சல்மான் கான் தன் குடும்பத்துடன் மஹாராஷ்டிராவில் உள்ள தனது பண்ணை வீட்டில் தங்கியுள்ளார். இதற்கிடையில் அங்கு நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுடன் இணைந்து, ‘தேரே பீனா' என்ற மியூசிக் வீடியோவிற்கான ஷுட்டிங்கை நடத்தி முடித்துள்ளதாக சமீபத்தில் அறிவித்தார்.
மேலும் அவரே பாடியுள்ள இப்பாடலின் வீடியோ விரைவில் வெளியாகும் என்று தெரிவித்தார். இந்நிலையில் அப்பாடலின், டீஸரை சல்மான் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். சுமார் 32 நொடி உள்ள அந்த டீஸர் முழுவதிலும், சல்மான் கான் மற்றும் ஜாக்குலின் பெர்னாண்டஸ் அற்புதமாக நடித்துள்ளனர்.