அமெரிக்காவில் 1960களில் புகழ்பெற்ற டார்சன் தொலைக்காட்சித் தொடரில் நடித்ததன் மூலம் அறியப்படுபவர் ரொனால்டு பியர்ஸ் எல்லி(81). இவர் தனது முதல் மனைவி கேத்தியை 1961ஆம் ஆண்டு விவகாரத்து செய்த பின் வேலரி லுந்தீன் என்பவரை இரண்டாவதாக மணமுடித்தார். வேலரி லுந்தீன் மிஸ் ஃளோரிடா பட்டத்தை வென்றவர் ஆவார். இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.
#Tarzan நடிகரின் மனைவி குத்திக் கொலை - மகன் கைது! - டார்சான் நடிகரின் மனைவி குத்திக் கொலை
வாஷிங்டன்: டார்சன் (Tarzan) தொடரில் நடித்து புகழ்பெற்ற அமெரிக்க நடிகர் ரொனால்டு பியர்ஸ் எல்லியின் மனைவியை அவரது மகனே குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரொனால்டு தனது மனைவியுடன் கலிஃபோர்னியாவின் சாண்டா பார்பராவில் வசித்துவருகிறார். இந்த சூழலில் நேற்று இரவு அவரது மகனான கேமரூன் எல்லி, அவரது தாயாரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு சென்ற காவல்துறையினர் கொலையாளி கேமரூன் எல்லியை சரணடையும்படி கூறினர். ஆனால் அவர் காவல்துறையினரிடம் மிரட்டல் விடுத்துள்ளார். அப்போது காவலர்கள் கேமரூன் மீது சரமாரியாக சுட்டனர். இதில் காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றபோது நடிகர் ரொனால்டு வீட்டில் இருந்ததாகவும், ஆனால் அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். பெற்ற தாயை மகனே கொலை செய்த சம்பவம் கலிபோர்னியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.