தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பாக்ஸ் ஆபிஸ் குயினான டாப்ஸி! - ஆடுகளம்

கடந்த ஒரு வருடத்தில் வெளியான திரைப்படங்களின் மூலம் பாக்ஸ்ஆபிஸில் அதிக வசூல் செய்த நடிகை பட்டியலில் டாப்ஸி பன்னு முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.

tapsee
tapsee

By

Published : Jun 7, 2020, 7:08 PM IST

வெற்றிமாறனின் ‘ஆடுகளம்’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை டாப்ஸி பன்னு. இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்‌.

2020ஆம் ஆண்டில் அதிகம் பேசப்பட்ட தப்பாட் படம் உள்பட பாக்ஸ் ஆபிஸில் அனைத்து திரைப்படங்களும் வெற்றிபெற்றதால் டாப்ஸிக்கு 2019 சிறந்த ஆண்டாக மாறியது. இவரது நடிப்பில் வெளியான கடைசி ஐந்து திரைப்படங்கள் மொத்த பாக்ஸ்ஆபிஸ் 352 கோடியே 13 லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளன.

இதில், கடந்த ஆண்டு மார்ச்சில் வெளிவந்த பத்லா படம் 88 கோடி ரூபாயும், ஜூனில் வெளியான கேம் ஓவர் - ஹிந்தி பதிப்பு 4 கோடியே 69 லட்சம் ரூபாயும், ஆகஸ்ட்டில் வெளியான மிஷன் மங்கல் 202 கோடியே 98 லட்சம் ரூபாயும், அக்டோபரில் வெளியான சாண்ட் கி ஆங்க் 23 கோடியே 40 லட்சம் ரூபாயும், இந்தாண்டு பிப்ரவரியில் வெளிவந்த தப்பாட் 33 கோடியே 6 லட்சம் ரூபாயும் வசூல் செய்துள்ளன.

இதனால், டாப்ஸி பன்னு கடந்த ஒரு வருடத்தில் பாக்ஸ்ஆபிஸில் அதிக வசூல் செய்த நடிகை பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details