தமிழர்களின் பெருமையை உலகுக்கு பறைசாற்றும் அடையாளம் தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் என்று அழைக்கப்படும் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம். உலகமே வியக்கும் வகையில் மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்த ஆலயம், 1,300 ஆண்டுகள் தாண்டியும் கம்பீரமாக, தமிழ்ர்களின் பெருமையை பேசிக் கொண்டிருக்கிறது. இந்த கோயிலின் குடமுழுக்கு 24 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை (பிப். 05) நடைபெறுகிறது.
தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையும், மத்திய அரசின் தொல்லியல் துறையும் இணைந்து குடமுழுக்கு விழாவை நடத்துகின்றன. கோயிலின் சிறப்பையும் சிவபெருமானின் அருட்கடாட்சத்தையும், தமிழர்களின் பெருமையையும் போற்றும் வகையில் திரைப்பட இயக்குநர் ஆதிராஜன் சிறப்பு பாடல் ஒன்று தயாரித்து, வீடியோவாக வெளியிட்டுள்ளார். இதை அஜய் ஷ்ரவன் பாடியிருக்கிறார்.