நடிகர் அஜய் தேவ் கானின் திரைத்துறைப் பயணத்தில் மைல் கல்லாகப்போகிற திரைப்படம்தான் 'தனஜி- த அன்சங் வாரியர்'.
உண்மைக் கதையை சாரம்சமாகக் கொண்ட இப்படத்தில் அஜய் தேவ் கான் தனஜி என்கிற போர் வீரராக வருகிறார். இது இவரது 100ஆவது திரைப்படம் என்பதால் படத்திற்கு முன்பிருந்தே எதிர்பார்ப்பு மிகுந்திருந்தது.
இது முகலாயர் காலத்தில் நடக்கிற கதை என்பதால் படத்தின் விஷுவல் எஃபக்ட்ஸ் காட்சிகளுக்கு படக்குழுவினர் மிகுந்த சிரத்தையுடன் உழைத்திருப்பது ட்ரெய்லரிலேயே தெரிகிறது.