தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'டோன்ட் வொரி ஐம் ஃபைன்' - ஸ்டேட்மெண்ட் வெளியிட்ட தமன்னா!

ஹைதராபாத்: கரோனா தொற்றின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த தமன்னா, தான் நலமுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

தமன்னா
தமன்னா

By

Published : Oct 5, 2020, 9:19 PM IST

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் தமன்னா. இவர் சமீபத்தில் ஹைதராபாத்தில் வெப்-சீரிஸ் படப்பிடிப்பு ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது அவருக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட கரோனா பரிசோதனை மேற்கொண்டார்.

பரிசோதனை முடிவில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தமன்னா சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்செய்தியை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இதனை அடுத்து நோய் தொற்றிலிருந்து தமன்னா மீண்டுவர வேண்டி ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

தமன்னா தனது சமூக வலைதளப் பக்கத்தில், தான் நலமுடன் இருப்பதாக தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், "லேசான காய்ச்சல், வாசனை திறன் இல்லாமல்போனதை அடுத்து ஹைதராபாத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் நான் சுயபரிசோதனை மேற்கொண்டேன். அதில் எனக்கு லேசான கரோனா நோய் தொற்று அறிகுறிகள் இருப்பது உறுதியானது.

இதனையடுத்து நான் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டேன். அங்கிருந்த மருத்துவர்கள் எனக்கு தொடர் சிகிச்சை அளித்துவந்தனர். எனக்கு லேசான அறிகுறிகள் ஏற்பட்டிருப்பதால், கலக்கம் வேண்டாம் எனக் கூறி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்துள்ளனர்.

மேலும் வீட்டிற்கு சென்று சில வாரங்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தியுள்ளனர். எனவே கடந்த சில நாட்களாக என்னுடன் பழகியவர்கள் பரிசோதனை செய்து கொண்டு தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். நான் மீண்டு வர வேண்டி பிரார்த்தனை செய்த, வாழ்த்துகள் தெரிவித்த ரசிகர்கள், பிரபலங்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றிகள்" எனக் கூறியுள்ளார்.

ஆகஸ்ட் மாத இறுதி வாரத்தில் தமன்னாவின் பெற்றோருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யபட்ட நிலையில், அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்த பட்டிருந்தனர். அப்போது தனக்கு கரோனா இல்லை என தமன்னா கூறியிருந்தார்.

ABOUT THE AUTHOR

...view details