இயக்குநர் பாபு யோகேஸ்வரனின் இயக்கத்தில் கௌசல்யா ராணியின் தயாரிப்பில் விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன், யோகிபாபு, ரோபோ சங்கர், குழந்தை நட்சத்திரம் பிரணவ், சோனு சூட், பூமிகா, முனீஸ்காந்த், ஆகியோர் இணைந்து நடிக்கும் தமிழரசன் படத்தின் இசை விரைவில் வெளிவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.
விரைவில் தமிழரசன் படத்தின் இசை! - music is composed by Ilayaraja.
இயக்குநர் பாபு யோகேஸ்வரன் இயக்கும் தமிழரசன் படத்தின் இசை விரைவில் வெளிவர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விரைவில் தமிழரசன் படத்தின் இசை!
கதாநாயகனாக தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்து வரும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் நீண்ட கால ஆவல் இளையராஜா இசையில் ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்பது தான். இந்த படத்தின் மூலம் விஜய் ஆண்டனியின் ஆவல் மட்டுமின்றி இசைஞானி இளையராஜாவின் கோடான கோடி ரசிகர்களின் எதிர்பார்ப்பும் நிறைவேற இருக்கிறது.
இந்நிலையில், மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட இதற்கான போஸ்டர், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.