தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'தியாகராஜ பாகவதருக்கு மணிமண்டபம் அறிவித்த முதலமைச்சருக்கு நன்றி' - தயாரிப்பாளர் வெங்கடேஷ் - தியாகராஜ பாகவதர் சிலை

திருப்பத்தூர்: ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் தியாகராஜ பாகவதர் சிலை அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்த முதலமைச்சருக்கு திரைப்படத் தயாரிப்பாளர் வெங்கடேஷ் நன்றி தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூரில் நடைபெற்ற தியாகராஜ பாகவதர் பிறந்தநாள் விழா
திருப்பத்தூரில் நடைபெற்ற தியாகராஜ பாகவதர் பிறந்தநாள் விழா

By

Published : Mar 1, 2020, 11:58 PM IST

தமிழ் சினிமா வரலாற்றில் மூன்றரை ஆண்டுகாலம் வெற்றிகரமாகத் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்த ஹரிதாஸ் திரைப்படத்தின் நாயகன் தியாகராஜ பாகவதர். தமிழ் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டாராக விளங்கிய இவரது 111ஆவது பிறந்தநாள் விழா, விஸ்வகர்மா சமுதாயத்தின் சார்பில் கொண்டாடப்பட்டது.

இதில் திரைப்பட தயாரிப்பாளர் வெங்கடேஷ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி தியாகராஜ பாகவதரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், ”திரை உலகின் நட்சத்திர ஜாம்பவனான தியாகராஜ பாகவதர் தன் வயது முதிர்ந்த காலத்திலும், பார்வையை இழந்து வாடினார். அந்தச் சமயத்தில் எத்தனையோ நடிகர்கள் அவருக்கு உதவ முன்வந்தபோதும், புறக்கணித்து ஆன்மிகத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்து வந்தார்.

அவருக்காக மணி மண்டபமும், சிலையும் அமைக்க அரசியல் கட்சித் தலைவர்கள், நடிகர்கள், திரைப்பட சங்க நிர்வாகிகள் என பலரைச் சந்தித்து வலியுறுத்தியும் இதுநாள் வரையில் எவரும் முன்வரவில்லை.

திருப்பத்தூரில் நடைபெற்ற தியாகராஜ பாகவதர் பிறந்தநாள் விழா

எனவே தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் கோரிக்கை வைத்ததன் பேரில், கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், திருச்சியில், ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் தியாகராஜ பாகவதருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்” எனப் பேசினார்.

இதையும் படிங்க:ரோஜா வனம் நிகழ்வின் மூலம் குஷ்பூ மூவருக்கு “சவால்“ விடுத்துள்ளார்!

ABOUT THE AUTHOR

...view details